சென்னை, ஜூன் 17- நூற்றாண்டைக் கடந்து தரமான வானிலை தரவு களை வழங்கி சேவையாற்றி வரும் சென்னை நுங்கம் பாக்கம் வானிலை ஆய்வு மையத்துக்கு உலக அள விலான அங்கீகாரத்தை உலக வானிலை ஆய்வு நிறுவனம் வழங்கியுள்ளது. “இந்தியாவில் முதல்முறையாக 1792-ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையம் அமைக்கப்பட்டது. அன்று முதல் புயல், மழை, குளிர், வெப்பநிலை உள்ளிட்ட பல்வேறு முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறது. இந்த மையம் சுமார் 140 ஆண்டுகளுக்கும் மேலாக, வானிலை விவரங்களை ஒரு நாள்கூட தவறாது பதிவு செய்து வருகிறது. இதன் நூற்றாண்டை கடந்த வானிலை சேவையை உலக வானிலை ஆய்வு நிறுவனம் அங்கீகரித்து, சான்றளித்து, கௌரவித்துள்ளது. ஜெனீவா நகரில் நடந்து முடிந்த 18-ஆவது உலக வானிலை மாநாட்டில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.